Poruppaayaa? / பொறுப்பாயா? Grandeurs of Delusion / மருட்சியின் மாட்சி
Lyric & Audio below 💜

பொறுப்பாயா?
ஒரு நாள் வரும்
ஒரு நாள்
நிலாவில் சேர்ந்து வாழ்வோம்
அமைதி மட்டுமே உணர்வு என்றாவோம்
எல்லோர்க்கும் ஒரு மொழி
எல்லோரும் ஒரு இனம்
வேற்றுமைகள் தோற்கடித்து
உயிர்வாழும் ஒரு இனம்
அதுவரை பொறுப்பாயா?
அதுவரை பொறுப்பாயா??
ஒரு நாள் வரும்
ஒரு நாள்
கண்ணீரும் தீர்ந்துபோகும்
கனவு என்பதே உணவு என்றாகும்
நல் நினைவுகள் மட்டுமே
சுமந்து செல்வோம்
அலைந்துத்திரியும் உயிரைக் கொஞ்சம்
உறங்க சொல்வோம்
அதுவரை பொறுப்பாயா?
அதுவரை பொறுப்பாயா??
ஒரு நாள் வரும்
ஒரு நாள்
குறைகள் மறந்து போவோம்
இறகேயில்லாத பறவைகள் ஆவோம்
வாடாத வயல்களில் பொற்காகித பூக்களாய்
காற்று வீசும்போதெல்லாம் நாமும் ஆடுவோம்
அதுவரை பொறுப்பாயா?
அதுவரை பொறுப்பாயா??
ஒரு நாள் வரும்
ஒரு நாள்
நிலாவில் சேர்ந்து வாழ்வோம்
அமைதி மட்டுமே உணர்வு என்றாவோம்
நல் நினைவுகள் மட்டுமே
சுமந்து செல்வோம்
அலைந்துத்திரியும் உயிரைக் கொஞ்சம்
உறங்க சொல்வோம்
அதுவரை பொறுப்பாயா?
அதுவரை பொறுப்பாயா??
A day will come
We'll live on the moon
Nothing to feel but peace
Every tongue turning alike
Every skin the same shade
Every difference defeated
By the last race alive
Until then will you wait?
Until then will you wait?
A day will come
Tears too will run dry
Nothing to eat but dreams
No burden to bear but nostalgia
Ever wandering souls
Will be put to rest
Until then will you wait?
Until then will you wait?
A day will come
We will forget to complain
And become flightless birds
Like glitter-paper flowers
In seasonless fields
Swaying with the wind's will
Until then will you wait?
Until then will you wait?
A day will come
We'll live on the moon
Nothing to feel but peace
No burden to bear but nostalgia
Ever wandering souls
Will be put to rest
Until then will you wait?
Until then will you wait?
Member discussion: