பரவாயில்லை,
மெத்தையில் படுத்தபடி
நண்பர்களிடம் விடைபெற்று இறத்தல்.
பரவாயில்லை,
கைகளில் காயங்களோ கீறல்களோ
கோரிக்கை மனுக்களோ இல்லாமல் இறத்தல்.
பரவாயில்லை,
துளைக்கப்பட்ட சட்டையோ, நெஞ்சில்
குண்டடித் தடயமோ காணாமல் இறத்தல்.
பரவாயில்லை,
முகம் பதிக்கத் தார்ச்சாலைக்குப் பதிலாக வெள்ளை தலையணையுடன்,
உறவுகளின் அன்பு கைகளைப் பற்றி,
உயிர்மீட்க மருத்துவர்கள் சூழ,
ஆசைதீர பிரியாவிடையாற்றிக்கொண்டு,
வரலாற்றை முற்றிலுமாக மறந்தபடி
உலகத்தை தன்போக்கிலேயே போகவிட்டு,
ஏதோ ஒருநாள் யாரோ ஒருவரால்
மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று
நம்பியபடி இறத்தல்.
பலத்தீன கவிஞர் "முரீத் அல்பர்ஹூதீ" எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். 💜
Tamil translation of Palestinian poet Mourid Barghouti's "It's Also Fine"
It's Also Fine
It's Also Fine
It’s also fine to die in our beds
on a clean pillow
and among our friends.
It’s fine to die, once,
our hands crossed on our chests,
empty and pale,
with no scratches, no chains, no banners,
and no petitions.
It’s fine to have a clean death,
with no holes in our shirts,
and no evidence in our ribs.
It’s fine to die
with a white pillow, not the pavement, under our cheek,
with our hands resting in those of our loved ones,
surrounded by desperate doctors and nurses,
with nothing left but a graceful farewell,
paying no attention to history,
leaving this world as it is,
hoping that, someday, someone else
will change it.
© Translation: 2009, Radwa Ashour
From: Midnight and Other Poems
Publisher: Arc Publications, Todmorden, Lancashire, 2009
Member discussion: