ஒவ்வொரு போருக்கும் கிளம்பும் முன்
மறக்காமல் எப்போதும்
கையோடு எடுத்துச்சென்றிருக்கிறேன்
என் தோல்வியை
ஒவ்வொரு காயமும் வலிக்கும் முன்
மறுக்காமல் எப்போதும்
அன்போடு கொடுத்துச்சென்றிருக்கிறேன்
என் மன்னிப்பை
ஒவ்வொரு நாளும் முடியும் முன்
தவறாமல் எப்போதும்
என்போடு தொடுத்துக்கொண்டிறுக்கிறேன்
என் நினைவுகளை
ஒவ்வொரு விடியல் துவங்கும் முன்
அயராமல் எப்போதும்
கனவோடு கடந்துகொண்டிறுக்கிறேன்
என் இரவுகளை
Never
I never forget to take to every war my defeat
I never refuse any of these wounds my forgiveness
I never stop sewing these bones with my memories
I never tire spending these nights with my dreams
Member discussion: